Categories
Virtual Classes

List of Sessions : வகுப்புகளின் பட்டியல்

இனிமேல்

  • 16/06/2021 : இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை :  தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. நீங்கள் உங்கள் ஆலோசனைகளை +91 99406 26911க்கு வாட்சப்பில் அனுப்பலாம்

இதுவரை

 

Categories
Virtual Classes

ஆண்மைக்குறைவு / மலட்டுத்தன்மை / பாலின அறிவியல்

பாலின அறிவியல் குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன

  • ஆண்மைக்குறைவு
  • மலட்டுத்தன்மை
  • பால் எப்படி தீர்மாணிக்கப்படுகிறது
  • நிறமிகளின் பங்கு என்ன
  • இன உறுப்பு பால் என்றால் என்ன
  • இனச்சேர்க்கை உறுப்பு பால் என்றால் என்ன
  • நாளமில்லா சுரப்பி சுரக்கும் இயக்குநீர்களின் பங்கு என்ன
  • உளவியல் பால் என்றால் என்ன
  • பாலின அடையாளம் என்றால் என்ன
  • பாலிய ஈர்ப்பு என்றால் என்ன
  • தான் ஆண் இல்லையோ, தான் பெண்ணோ என்று குழம்பினால் அது நோயா ? அவருக்கு மருத்துவ, மனநல, உளவியல் (Medical, Psychiatric, Psychological) சிகிச்சை கொடுத்து அவரை சரி செய்ய முடியுமா, முடியாதா ? செய்யலாமா, செய்யக்கூடாதா

இது குறித்து ஞாயிறு 13/06/2021 இரவு 8 மணி முதல் 10 மணி வரை இணைய வகுப்பறையில் (சுட்டி: www.gurubruno.info/class ) உரையாடினோம். மீண்டும் மற்றொரு நாள் உரையாடுவோம்.

Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது

Categories
Virtual Classes

உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance

ஸ்டெரஸ் என்பது என்ன ? அது நல்லதா, கெட்டதா ?

ஒருவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் மற்றும் உந்துதலால் (stress) அவரது செயல்திறன் (Performance) அதிகரிக்குமா குறையுமா ? இது ஏன் நடக்கிறது ?

இது முழுவதும் மனம் சார்ந்த விஷயம் தானா அல்லது இதில் உடலியக்க விதிகளும் உண்டா ?

உந்துதலையும் அழுத்தத்தையும் அதிகரித்துக்கொண்டே சென்றால் என்ன நடக்கும் ?

படிப்பது, வேலை பார்ப்பது ஆகியவற்றில் இந்த விதிகளை எப்படி பயன்படுத்துவது  ?

உங்கள் ஊழியர்களின் பணிச்சுமையை எப்படி வடிவமைக்க வேண்டும் ? உங்கள் பணியாளர்களிடம் இருந்து அதிகம் வேலை, தரமான வேலை பெறுவது எப்படி ?

இது குறித்து வியாழன் 27/05/2021 இரவு 8 மணி முதல் 10 மணி வரை Guru Bruno’s Virtual Class Room இணைய வகுப்பறையில் (சுட்டி: www.gurubruno.info/class ) உரையாடினோம். மீண்டும் மற்றொரு நாள் உரையாடுவோம்

Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது

 

Categories
Virtual Classes

கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery

கொரோனா வைரஸ் அவனை மிரட்டியது. பயந்து ஓடினான்.
நிமோனியா துரத்தியது. மீண்டும் ஓடினான்.
மாரடைப்பும் பக்கவாதமும் பயமுறுத்தியது. ஓடினான் ஓடினான்.

இப்பொழுது கரும்பூஞ்சை என்கிறார்கள்.
மீண்டும் ஓட வேண்டுமா, வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடவேண்டுமா ?
அடுத்து என்ன செய்யலாம்

கரும்பூஞ்சை என்ற பெயர் சரியா ?
இந்த கரும்பூஞ்சை *எதனால்* வருகிறது *எப்படி வருகிறது* ?
*யாருக்கு* அதிகம் வருகிறது ? *எந்த நிலையில்* அதிகம் வருகிறது
*தடுப்பது* எப்படி ?
சிகிச்சையளிப்பது எப்படி ? *மருந்துகள்* யாவை ? *அறுவை சிகிச்சை* ஏன் செய்யப்படுகிறது

குறித்து *ஞாயிறு 23/05/2021 மாலை 9 மணிக்கு* இணையத்தில் http://www.gurubruno.info/class என்ற சுட்டியில் உரையாடினோம். மீண்டும் மற்றொரு நாள் உரையாடுவோம்

Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது

Categories
Virtual Classes

மரபு வைத்திய முறைகள் : சாதகங்களும், பாதகங்களும்

மரபு வைத்தியம் என்றால் என்ன ? நவீன விஞ்ஞான வைத்தியம் என்றால் என்ன ? மாற்று வைத்தியம் என்றால் என்ன ?

21ஆம் நூற்றாண்டில் மரபு வைத்திய முறைகளின் பங்கு என்ன ? மாற்று வைத்திய முறைகளின் பங்கு என்ன ?

கொரோனா பெருந்தொற்றில் மரபு வைத்திய முறைகளை பயன்படுத்துவால் உள்ள சாதக பாதகங்கள் எவை ?

இது குறித்து வியாழன் 20/05/2021 இரவு 8 மணி முதல் 9 மணி வரை Guru Bruno’s Virtual Class Room இணைய வகுப்பறையில் (சுட்டி: www.gurubruno.info/class ) உரையாடினோம். மற்றொரு நாள் மீண்டும் உரையாடுவோம்

Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது

Categories
Virtual Classes

கொரோனா வைரஸ் : அடிப்படை விஷயங்கள்

கொரோனா பெருந்தொற்று குறித்து விளங்கி கொள்வதில் பலருக்கும் பல குழப்பங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது
ஏன் என்று யோசித்தால் சில பல காரணங்கள் தோன்றுகின்றன

முதலில்

  • நோய் *பரவுதல்* வேறு (* infectivity, communicability*)
  • நோய் *பாதிப்பு* + நோயினால் *மரணம்* என்பது வேறு ( *virulence, pathogenesis, death* )

பலருக்கும் இந்த அடிப்படை தெரியவில்லை. அதே போல் பாதிப்பு என்பதும் இரண்டு வகையில் ஏற்படலாம்

  • *வைரசினால் ஏற்படும் பாதிப்புகள்* வேறு (*Virus Induced Damage to Cells*)
  • *உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினால் ஏற்படும் பாதிப்புகள்* என்பது வேறு ( *Immunity Induced Damage to Cells* )

என்பதையும் பலர் அறியவில்லை

அடுத்து 

  • *தடுப்பது* வேறு (Prevention)
  • *கண்டுபிடிப்பது* வேறு (Detection)
  • *கட்டுப்படுத்துவது* வேறு (Containment)
  • *குணப்படுத்துவது* வேறு (Cure)

இந்த அடிப்படைவிஷயங்களை யாரும் பேசவில்லை
அல்லது பேசியவர்களை பெரும்பாலனவர்கள் கேட்கவில்லை
என்பதுதான் இந்த அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று நினைக்கிறேன் 

இதனால் தான் பலரும்

  • ஒரு விஷயத்தை ஏன் செய்கிறோம்
  • நாம் செய்யும் செயல் நோய் பரவுவது குறித்தா, பாதிப்பு குறித்தா
  • நாம் செய்யும் செயல் தடுப்பு நடவடிக்கையா, கண்டுபிடிக்கும் நடவடிக்கையா, கட்டுப்படுத்தும் நடவடிக்கையா, குணப்படுத்தும் நடவடிக்கையா,

என்ற புரிதலே இல்லாமல் செயல் பட்டு கொண்டுள்ளார்கள்

எனவே இது குறித்து நமது நண்பர்கள் 16.05.2021 மாலை 6:30 முதல் 8:30 வரை கூகிள் மீட் (சுட்டி: www.gurubruno.info/class ) மூலம் பேசினோம். மற்றொரு நாள் மீண்டும் உரையாடுவோம்

Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது

Online Class
Online Class